Friday, November 26, 2010

தேன் மிட்டாய்

சின்ன வயசுல அம்மா கொடுக்கும் 50 பைசா ஒரு ரூபாய்க்கு நான் ஆசையாக வாங்குவது எனக்கு புடிச்ச தேன் மிட்டாய், கமர்கட், கடலை உருண்டை, பல்லி மிட்டாய் (சீரக மிட்டாய்)...

விடுமுறை நாட்கள்ல கில்லி, பம்பரம்ன்னு நாங்க மும்முரமா இருப்போம்.... சாப்பிடாம கொள்ளாம ஒரே விளையாட்டுதான்.....  மதியம் சாப்பாடெல்லாம் கெடயாது... மிட்டாய், கொழா தண்ணி...  எலந்த பழம், மங்கா, நாகப்பழம், தர்பீஸ்....   வீட்ல என்னா திட்டு வாங்கினாலும் இது வாரம் தவறாம நடக்கும்...  டௌசர் பாக்கெட்டில் எப்பவும் மிட்டாய் இருக்கும்...   செட்டியார் கடையில் வாங்கும்போது அவர் பேப்பரில் அழகாக மடிச்சு கொடுக்க.... பத்திரமாக இருக்கும்.

காலம் உருண்டோட... படிக்க வெளியூர் போக வேண்டியிருந்தது.... ரொம்ப கஷ்டமாக இருந்தாலும்.... வேற வழி இல்லை.  படிச்சி முடிச்சாச்சி..... திருவல்லிக்கேணி மேன்ஷன் வாழ்க்கை.... வேல தேட ஆரம்பிச்சாச்சி... அப்பா நண்பர் சிபாரிசில் பாரிஸில் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்து வருடங்கள் போனது...  கல்யாணமும் முடிஞ்சு குடும்பஸ்தன் ஆயாச்சு...  எப்பவாவது ஊருக்கு போக நேர்ந்தாலும், அவசர அவசரமாக வர வேண்டிய சூழ்நிலை.... ம்ம்ம்ம்..... எல்லாம் கனவு மாதிரி இருக்கு....

டவுனில் கடன உடன வாங்கி ஒரு சின்ன அபார்ட்மென்ட் வாங்கியாச்சு....   ரெண்டு கொழந்தையுமாச்சு.... கடைக்கு போறது வர்ரது எல்லாம் நாம தான் வேற வழி...... வந்த புதிதில் டவுன் வாழ்கை ரொம்ப ஜாலியாதான் இருந்தது.... மூணு நாலு வருஷம் போனதும்தான் புத்திக்கு உரைச்சது நம்ப இயந்திரதனமான வாழ்க்கைக்கு பழக்கபட்டுட்டோம்ன்னு.... இருந்தாலும் கிடைக்கிற நேரத்தில் பழசயும் புதுசையும் கம்பேர் செய்து பார்த்துகிறது என் வழக்கம்....

நான் வழக்கமா என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற அண்ணாச்சி கடைலதான் எல்லா மளிகை சாமான் மத்த லொட்டு லொசுக்கு எல்லாம் வாங்குறது....  ரெகுலரா சாமான் வாங்குறதால அண்ணாச்சி கடைல நின்னு சில நேரம் பேசிகிட்டு அப்படியே நோட்டம் விடறதுண்டு...  அண்ணாச்சி கடைக்கு பக்கத்தில் தெரு முனையில் ஒரு பங்க் கடை மாதிரி ஒரு சின்ன கடை இருக்கும்... சில சமயம் எனக்கு ஏதாவது சின்ன சின்ன ஐட்டம் வேணுங்கிற போது போவேன்... அரனாகயிறு, ஊசி, பின், கிளிப், இன்க் பில்லர், (இன்னும் சொல்லிகிட்டே போகலாம்) இது மாதிரி வீட்டம்மாவுக்கு தேவையான முக்கிய சாமான்கள் தேவைன்னும்போது அந்த கடைக்கு போகறதுண்டு....  சில சமயம் பொருள் வாங்குற சமயம் அப்படியே நோட்டம் விடுரதுண்டு....  அங்க நான் சின்ன வயசுல ஆசையா சாப்பிடுற மிட்டாய் ஐட்டமெல்லாம் இருக்கும்.... அந்த தெருவுல போகிற சின்ன பசங்க வாங்கி சாப்பிடறத பாக்கிறதோட சரி.... சின்ன சின்ன பாட்டிலில் காராசேவு, மிச்சர், காரா பூந்தி எல்லாம் இருக்கும், ஒரு ரூபா ரெண்டு ரூபாய்க்கும் பேப்பரில் மடிச்சி கொடுப்பாரு கடைக்காரர்... எல்லாம் பாவம் சில ஏழை பாழைங்க இன்னும் இது மாதிரி கடைங்கள நம்பி இருக்காங்க....

நம்ப கொழந்தைங்கல்லாம்  இப்ப டிவி பாத்துட்டு அதுல வர்ற சாக்லேட், பிஸ்கட் அத தான் கேக்குதுங்க....  நம்ப வீட்டம்மாவும், நாம்ப சாப்டுற ஐட்டமெல்லாம் பாத்து பாத்து தான் வாங்குவாங்க... இப்ப வீட்டுக்கு பக்கத்திலேயே பெரிய பெரிய ஷாப்பிங் கடைஎல்லாம் வந்தாச்சி.... வாரம் ஒருக்கா வீட்டுல கூட்டிட்டு போய் தள்ளு வண்டில ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சு......

ஆனா ஒன்னு மாசம் எப்படியும் டாக்டருக்குனு நூறு இரநூறு செலவு வந்துகிட்டேதான் இருக்கு.... எங்க தத்தாவுக்கு 89 வயசாகுது, மனுஷன் இன்னும் சைக்கிள் ஒட்டுறார்ணா பாத்துகோங்க... ஒருநாள் தாத்தா என் வீட்டுக்கு வந்தாரு... கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுகினு இருந்தாரு... சரி டாப்பிக்க மத்துவோம்ன்னு, தாத்தா பாப்பாவுக்கு என்ன வாங்கியாந்திங்க அப்படின்னு கேட்டுபுட்டேன்.... அவர் நம்ம ஐட்டமெல்லாம் எடுத்து குடுக்கவும் எனக்கு ஒரே சந்தோசம் போங்க..... அவரா, கொழந்த கிட்ட குடுத்து சாப்டு சாப்டுன்னு சொல்ல, கொழந்தைங்க மொத வாங்கிகிச்சுங்க.... அப்புறம் கொஞ்சம் சாப்ட்டுட்டு வேணாம்னு சொல்லிட்டு வெச்சிருசிங்க, தாத்தா குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு வந்து சோபால ஒக்காந்தாரு, என்னடா கொழந்தைங்க மிட்டாயெல்லாம் சாப்ட்டாங்க்ளான்னு கேட்டுபுட்டாரு...

நானும் சும்மா இருக்காம, எங்க தத்தா இப்ப இருக்கிற கொழந்தைங்கல்லாம் முன்ன மாதிரி கெடயாது , எல்லாம் டிவி பாத்துட்டு கெட்டு போச்சிங்க, என்ன பண்றது தத்தா ன்னு சொல்லவும், தத்தா என்னையே பாத்தாரு, நீ சொல்றது ஒரு விதத்துல சரிதாண்டா, ஆனா ஒரு விஷயத்த எல்லாரும் மறந்துட்டோம், இந்த கடலை மிட்டாய் வெல்ல பாகு, கடலை எல்லாம் போட்டு செஞ்சிருக்கான்... இதுல இரும்பு சத்து, புரத சத்து எல்லாம் இருக்கு, பல்லி மிட்டாய் சீரகம் போட்டு செஞ்சது, ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது, ஆனா இதையெல்லாம் உட்டுட்டு, நீங்க டாக்டர்கிட்ட போய் இரும்பு டானிக், மாத்திரை எல்லாம்  சாப்பிடரிங்க.  டப்பாவுல அடைச்சு நாட்டு மருந்துன்னு விக்கிற எல்லாமே நம்ம சாப்பாட்டு விஷயத்துல இருக்கு.  நாம்ப பேப்பெர்ல மடிச்சு பலசரக்கு வாங்கினு இருந்தோம், இப்ப பிளாஸ்டிக் கேரி பேக்ல பொருள் வாங்குறோம், இப்ப கவர்மென்ட் என்ன சொல்லுது, பிளாஸ்டிக் கூடாது, பேப்பர், துணி, இல்ல சணல் பை உபயோகிங்கன்னு.... இதாண்டா கால கொடுமைங்கிறது.....

இத கேக்கவும் நான் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்...... அப்ப நீங்க??

No comments:

Post a Comment