Monday, December 27, 2010

நதி மூலம் - ரிஷி மூலம்

எங்க ஊரு வாத்தியாரு கலைராஜன் ஊரில் ரொம்ப பிரபலம்...  வேலைல இருந்து ரிடையர் ஆவறதுக்கு முன்னாடியே ஏழை பாழைங்களுக்கு உதவி பண்ணுவார்... அவர் மனைவியும் தன்னாலான உதவிகளை செஞ்சிகிட்டு வந்தாங்க... ஆனா எந்த விளம்பரமும் தேடிக்காத நல்ல மனுஷங்க.... இவங்களோட நடவடிக்கைய ரொம்ப காலமா கவனிச்சிகிட்டிருந்த ஒரு ஊர் பெரிய மனிதர்... இவங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவி கிடைகிறாப்ல ஏற்பாடு செஞ்சு கொடுத்தார்... கவர்மெண்டோட நெறைய சமூக நல திட்டங்கள வாத்தியாரும் அவர் வீட்டம்மாவும் செய்துகிட்டிருந்தாங்க...  இந்த சமயத்துல வாத்தியார் சின்னதா ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சாரு...  அவருடைய சேவிங்க்ஸ் மொத்தத்தையும் போட்டு நல்ல படியா ஆரம்பிச்சாரு...  கொஞ்ச வருஷத்துல ரொம்ப பிரபலமான ஸ்கூலாக பேர் வாங்கிடுச்சு.... வாத்தியாரோட நல்ல மனசுக்கு ஏத்தாப்ல... அவங்க வீட்டம்மாவும் அவருக்கு ஒத்தாசையா இருந்தாங்க...  ஏழை குழந்தைங்களுக்கு கொறஞ்ச பீஸ், முடியாதவங்களுக்கு கவர்மென்ட் மூலமா புக், யுனிபார்ம், கல்வி உதவி தொகை அப்படின்னு அவங்களால முடிஞ்ச வகைல செஞ்சிகிட்டு இருந்தாங்க.  வாத்தியாரின் பிள்ளைங்களும் அந்த பள்ளிகூடத்துல தான் படிச்சு பெரிய வேலைல சேந்தாங்க.  கவர்மென்ட் உதவி அப்புறம் ஊரில் உள்ள பெரிய மனுஷங்க குடுக்கிற டொனேஷன் இதையெல்லாம் வெச்சு ஸ்கூல நல்லா டெவெலப் பண்ணிட்டாரு நம்ம வாத்தி...  ஆனா........
 
இத பாத்த நம்ப ஆளுங்க,  சின்ன சின்ன அல்லு சில்லுங்கல்லாம் ஸ்கூல் ஆரம்பிச்சாங்க......  கண்ட மேனிக்கு பீஸ், டொனேஷன் வாங்க ஆரம்பிச்சாங்க... அதில பாருங்க நம்ப க்ளோஸ் பிரண்டு ஒருத்தர் வகை தொகை இல்லாம, கை நீட்ட ஆரம்பிச்சாரு, அரசியல்வாதி, பைனான்ஸ் கம்பெனிகாரன், கந்து வட்டிகாரன் கிட்டயெல்லாம் டொனேஷன் வாங்கி, பாக்றதுக்கு டவுன்ல இருக்ற ஸ்கூலாட்டம் டேகேரஷன் பண்ணாரு.  எக்கச்சக்க விளம்பரம், பாக்குற எடத்துல எல்லாம் ஸ்கூல பத்தி பெருமையா விளம்பர பலகை எல்லாம் வெச்சாரு.   செம கலக்சன்,  மனுஷன்  சும்மா பள பளன்னு ஆய்ட்டாரு.  சார் இப்பவல்லாம் ரொம்ப பிஸி, ஸ்கூல் பங்க்ஷன் எல்லாத்துக்கும், பெரிய பெரிய தலைங்கள எல்லாம் கூப்டு ரொம்ப கிராண்டா நடத்துனாரு.  ஆண்டு விழாவுக்கு பிரபல நடிகர் நடிகைகளோட நடனம், பாட்டுன்னு ஒன்னும் சொல்லிக்கவே முடியலே.  நண்பருக்கு இப்ப 2  அல்லகைங்கதான் மெயின்.  அவங்கள தாண்டி அவர பாக்கணும்ன்னா ரொம்ப கஷ்டம்.   கூட இருக்ற அல்ல கைங்க தொல்ல தாங்காம, அண்ணன் உள்ளாட்சி தேர்தல்ல தலைவர் போஸ்ட்க்கு நின்னாரு,  எலக்சன் டைம்ல பணத்த தண்ணியா செலவு பண்ணாரு நம்ப பிரண்டு.  தலைவர் பதவிக்கு ரொம்ப காம்பெடிஷன் இருந்ததால நம்ம பார்டி, அவர் ப்ராபர்டி, ஸ்கூல் நெலம் எல்லாத்தையும் அடமானமா வெச்சாரு.  ஆனா பாருங்க நண்பரோட துரதிர்ஷ்டம், எலக்க்ஷன்ல பார்ட்டி படு தோல்வி, கடன் காரங்க தொல்ல அதிகமாய்டுச்சு, வேற வழி இல்லாம நம்ம ஆளு ஸ்கூல விக்க வேண்டியதா போச்சு.....  நண்பர் கூட இருந்த அல்லகைங்க தான் இப்ப இருக்கிற ஓனருக்கும் ரைட் லெப்ட் கைங்க....

நண்பரோட பசங்க இப்ப வாத்தியாரோட ஸ்கூல்ல தான் படிக்குதுங்க  !!!
        

1 comment:

Post a Comment