Saturday, December 19, 2015

மழை சிறுகதைகள்!!
2) தண்ணியில கண்டம்
வானம் இருண்டு கிடந்தது.... இரண்டு மூன்று நாட்களாக மழை விடாது பெய்து இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டிருந்தது.....  இவ்வளவு பாதிப்பு இருந்தும்.... டாஸ்மாக் கடையில் கூட்டம் கொறயல.... மப்பும், மந்தாரமுமான சூழலால் கடை நிரம்பி வழிந்தது.... புறம்போக்கு பயல் ஒருத்தன்.... ரொம்ப நேரமா ஒக்காந்து தண்ணியடிச்சிக்கிட்டிருந்தான்.... காலைல நல்ல வேட்டை போல... சாயங்காலமே ராத்திரி போல இருட்டிகிட்டு வந்தது.... கரண்ட் வேற கட்டாக... குடிகார பயலுங்க சலம்ப.... பார்க்காரன் நாலஞ்சு மெழுகுவத்திய ஏத்திவெச்சான்... பொறம்பொக்கு பயல் இரண்டு எக்ஸ்ட்ரா பட்டில்களை வாங்கி இடுப்புல சொருகினு... ஸ்கூல் ஓரமா ஒதுங்குனான்... போதை தலைக்கேற... பயலுக்கு ஒடம்பு நம நமக்க ஆரம்பிச்சிட்டது... ஒரு சிகரெட் பத்தவைத்தபடியே நடந்து வாய்க்கா பக்கம் ஒதுங்குனான்... ஒன்னுக்கு போய்ட்டு... வாய்க்கா ஓரமுள்ள குடிசைங்க பக்கம் நோட்டம் விட்ட படியே நடந்தான்... அப்படி போகையில... கட்டிட வேலை பாக்குற ஒரு கூலிக்கார குடும்பம்... சாப்ட்டுட்டு அசதியா திண்ணையில படுத்து கெடந்தாங்க.... இந்த பயல் நைசா கூலிகாரனோட சின்ன பொண்ண வாய பொத்தி தூக்கிட்டான்... ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணும் பாக்காம தன்னோட ஒடம்பு பசிக்கு இரையாக்க முடிவு பண்ணான்... பொண்ணு திமிரவே... மதுவை எடுத்து பொண்ணு வாயில் ஊத்தினான்.... திரும்பவும் ஆள் அரவரம் இல்லாத பள்ளிக்கூடத்தோரம் ஒதுங்கினான்... அந்த பெண் போதையில் மயங்கி கிடக்க... மீதமிருந்த சரக்கை காலி செய்தான்... அது போதல.... அந்த பொண்ண ஒரு இருட்டா இருந்த இடத்துல படுக்க வச்சிட்டு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.... லேசா தூற ஆரம்பிக்க ஓட்டமாக ஓடி டாஸ்மாக்கை அடைந்தான்... ஒரே கூட்டம்... மழை பெரு மழையாக ஆரம்பித்தது.... வாங்கிய சரக்கில் ஒன்றை மழை விடும் வரை குடிப்போம் என நினைத்து.... பாரில் உள்ளே நுழைந்ததும்.... இவனுடைய குரூப் ஒன்னு ஒக்காந்து தண்ணிய போட்டுகினு இருந்தது... இவனை பார்த்ததும் ஜோதியில் ஐக்கியமாக வைச்சாங்க.... வேற வழி இல்லாம மழை வுடற வரைக்கும் சாமளிப்போம்னு ஒக்காந்தான்.... டைம் ஆக ஆக பெரு மழை பேய் மழையானது....விடாமல் அடிச்சி ஊத்தி மழை அடங்க இரண்டு மூணு மணி நேரம் ஆனது....  வெளியே மைக்கில் ஏதோ அறிவிச்சிட்டு போனாங்க... இந்த பயல் நைசா எஸ்கேப் ஆகி வெளியே வந்தான்.... தூத்தல் போட்டுகினுதான் இருந்திச்சி... ஒரு பிளாஸ்டிக் கவர தலையில கவுத்துகினு ஸ்கூல நோக்கி வேகமாக நடந்தான்... ரோடெல்லாம் தண்ணி.... இடுப்பில தொட்டு பாத்துகிட்டான் குவாட்டர் பாட்டில... ஸ்கூல நெருங்க கொஞ்ச நேரம் ஆச்சு.... கிட்ட போனதும் பாத்தா... ஸ்கூல் கேட் தெறந்து கெடந்தது.... மெதுவா உள்ள எட்டி பாத்தான்.... உள்ள மொத்த குடிச ஜனமும் அடங்கி கெடந்தது.... கார்பரேஷன் ஆபீஸர் ஒருத்தர், ஜனங்க கிட்ட சொல்லிகிட்டிருந்தத கேட்டான்... கன மழையால பெரிய ஏரிய தொறந்து விட்ருக்கிறதாகவும்... மக்கள பாதுகாப்பான எடத்துல தங்க வெக்க பெரிய ஆபீஸருங்க ஆர்டர் போட்ருக்கறாதகவும்......  சரி இன்னிக்கு வேட்டை மிஸ் ஆகிடுச்சின்னு குவார்டர கையில எடுத்துகினு மறவா ஒதுங்குனான்...  அவனுக்கு லேசா வயிறு கலக்குற மாறி இருக்கவும்... ஓடை பக்கமா ஒதுங்க நடந்தான்.... காலில் சுள்ளுன்னு ஏதோ குத்த, மரண வலி... தீப்பெட்டிய பத்த வெச்சு பாத்தா... கொஞ்ச நேரம் முன்னாடி இவன் அந்த சின்ன பொண்ணுக்கு உத்திவிட்டு கீழே தூக்கி அடிச்ச பாட்டில்.... ரத்தம் பொல பொலன்னு ஊத்த.... கண்ணாடி துண்ட வெளியே எடுத்தான்.... புது குவர்டர் பாட்டிலில் இருந்து கொஞ்சம் பிராந்திய காயத்தின் மேல ஊத்துனான்... வயிறு கல கல ங்க... கால் வலியோட ஓடையில ஓரமா ஒக்காந்தான்....  ஒரு அஞ்சி நிமிஷம் கூட ஆயிருக்காது... ஓடைத்தண்ணி கால் வரை வந்துடிச்சி... சரின்னு கு####ய கழுவினான்... தீடீல்னு தண்ணி போர்ஸா வர ஆரம்பிச்சது.... வேக வேகமா கழுவிட்டு எந்திரிக்கிரதுக்குள்ள தண்ணி நெஞ்சளவு வந்துடிச்சி... தண்ணில வேகமா நடக்க முடியல... போதை வேற... கால்ல குத்துன கண்ணாடி வேற.....  வழியில்லன்னு ஓட முயற்சி செஞ்சான்... பின்பக்கம் ஹோவென்ற சத்தம்... திரும்பி பாத்தா ஆள் ஒசரத்துக்கும் மேல தண்ணி இவனை நோக்கி....   

No comments:

Post a Comment