Thursday, December 17, 2015

பிராயசித்தம்

மழை சிறுகதைகள்!!
1) பிராயசித்தம்
நம்ம நண்பர், அதாவது கதையோட நாயகன் சென்னையில் வசிக்கும் ஒரு சிவில் காண்ட்ராக்டர்.... கடுமையான உழைப்பாளி.... ரியல் எஸ்டேட் மார்கெட் சூடு பிடிச்க ஆரம்பிச்ச சமயத்துல, சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளை பண்ணிகிட்டிருந்தாரு.... நாளாக நாளாக... அவர் காட்டில் அடை மழை.... பணம் ஏகமா பொரள, மனுஷன் ஆளே மாறிட்டாரு.... சின்ன ப்ராஜக்டுகள் போய்... சில காலமா பல கோடி மதிப்பிலான பெரிய அடுக்குமாடிகள் கட்டும் காண்ட்ராக்டுகளை மட்டும் செய்துகிட்டிருந்தார்.... தென்சென்னையில் ஐ.டி கம்பெனிகள் வளர வளர... சாரோட பேங்க் பேலன்சும் வளர்ந்துகிட்டே போனது.... அப்ரூவல் வாங்குறது முதல்... கட்டிமுடிக்கும் வரை.. நண்பர் தீயா வேல செய்வாரு... ரொம்ப நாள் பீல்டுல இருக்கிறதால... கவுன்சிலர் முதல், கார்பரேஷன் வரை.... மந்திரியானாலும் சரி... அதிகாரியானாலும் சரி... எல்லாரையும் சரி கட்டி விடுவார்....  ரொம்ப நாளா அவருக்கு ஒரு ஆசை... சொந்தமா தன் ரசனைக்கேற்ப எல்லா வசதிகளுடன் தனி வீடு கட்டி குடியேற வேணும்னு ஆச பட்டாரு.... காண்ட்ராக்டராக இருந்ததால இடம் சீக்கிரமா கிடைச்சது.... தண்ணி பிரச்சனை எதும் வராக்கூடாதுன்னு சென்னையின் முக்கிய ஏரிக்கு பக்கமாக காஸ்ட்லியான ஆளுங்க இருக்கிற எடமா பாத்து இடம் வாங்கி... பிரம்மாண்டமான அரண்மனை போல வீடு கட்டினார்.... வீட்டுல எல்லாரும் ஒரே ஹேப்பிதான் போங்கோ.... கார்கள், நகை, வேலையாட்கள் எதுக்கும் குறையில்லாம நல்லாதான் போனது வாழ்க்கை.... வேலை காரணமாக எல்லா மட்டத்துலயும் லிங்க் இருந்ததால.... பலருக்கு இவர் வேலை முடிச்சி குடுத்து கனிசமா அமெளன்ட் பார்க்க ஆரம்பிச்சாரு.... பொண்ணு டாக்டருக்கு படிக்க, பையன் அமெரிக்காவுல மேல் படிப்பு படிக்க.... இன்னும் பல செலவுகளுக்கு இந்த அமெளண்ட்கள் வசதியாக போனது.... நாள் ஆக ஆக.... வில்லங்கமான இட விஷயங்களிலும் உதவி செய்ய ஆரம்பித்தார்.... இதில் பண வரவு தாறு மாறாக எகிற... புல் டைம் வில்லங்க விஷயமாக பிசியாக இருந்தார்.... பீச்சோரம் பெரிய மனுஷங்களுக்காக கட்டுற “சீ வியு” ப்ராஜக்டுகளுக்காக.... பல உள்ளடி வேலைகள் செய்ய ஆரம்பிச்சாரு..... இதனால... பல அப்பாவி ஜனங்க வீடில்லாம அலைஞ்சாங்க.... ஆனா மேல் தட்டு மக்களுக்கு... அவர்களின் தனிப்பட்ட உல்லாசம் தேவையாக இருந்தது..... காசு இருக்கும் போதே அனுபவித்துக்கொள்ளவேண்டும் என்பது அவர்கள் பாலிஸி..... அதற்கு எந்த விலையானாலும் கொடுக்க தயாராக இருந்தார்கள்.... அவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மட்டுமே முக்கியமானதாக இருந்தது.... இந்த நிலையில் நம் நண்பர் தன் பெண்ணிற்கு கல்யாண ஏற்பாடுகளை செய்வதில் மும்முறமாக இருந்தார்.... வீடு முழுவதும், துணி மணிகளும், நகைகளும் இறைந்து கிடந்தது..... சென்னையின் முக்கிய கல்யாண மண்டபத்தை அட்வான்ஸாக புக் செய்து வைத்திருந்தார்.... பெரிய புள்ளிகள்... அதிகாரிகள்... அரசியல் ஆல்-இன்-ஆல் –கள், சொந்த பந்தங்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை.... எல்லாரயும் அழைத்திருந்தார்... அவரின் உதவியாளர்கள் பம்பரமாய் சுழன்று சுழன்று வேலை பார்த்தனர்.... கல்யாணத்திற்கு சில நாட்கள் இருந்த நிலையில்... நண்பருக்கு நிலை கொள்ளவில்லை.... அன்று இரவு தூங்க போனவருக்கு தூக்கமே வரவில்லை.... கல்யாண காட்சிகள் கனவாக வந்து தொல்லை கொடுக்க.... அரை தூக்கதிலிருந்தார்.... நள்ளிரவு ஒரு மணி அளவில் பாத்ரூம் போக காலை கீழே வைத்தவர் ஆடி போய்விட்டார்.... வீடே வெள்ளக் காடாக... முதல் மாடி வரை தண்ணீர்.... மனைவி மக்களுடன் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தார்.... செல்போன் செத்து போய் கிடந்தது.... விடியற்காலையில் இரண்டு மூன்று பேர் படகுகளில் மைக் வைத்து... அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.... பெருமழை காரணமாக ஏரிகள் திறந்து விட்டதால் தீடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும்.... மக்கள் அனைவரும் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் பெயர சொல்லிக்கொண்டிருந்தனர்... நாளை திருமணம்... வெளியே பேய் மழை....  யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை.... வேறு வழியின்றி.. அனைவரும் படகின் உதவியுடன் அருகில் உள்ள அரசு முகாமை வந்தடைந்தார்.... அங்கிருந்து.... சில சமூக ஆர்வலர்கள் மூலம் வெளியேறி... பிரபல நட்சத்திர ஓட்டலில் தஞ்சமடைந்தார்.... மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் சொல்லி திருமணத்தை வேறு நாட்களுக்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர்.... நேரம் ஆக ஆக மழை விடாமல் வெளுத்து வாங்கியது.... நண்பருக்கோ வீட்டில் அனைத்து கல்யாண பொருட்களும் பத்திரமாக இருக்குமோ என்ற கவலை அரித்தெடுத்துக்கொண்டிருந்தது....... விடாது பெய்த பேய் மழை பாரபட்சம் பார்க்காமல் பெய்து தீர்த்தது..... இந்த மழையில் நம்ம வாட்ச்மேன் ஒருத்தரோட பொண்ணு கண்ணாலமும் நின்னு போச்சு.... இருந்த குடிசையும் இடம் தெரியாம தண்ணியோட போக.... எல்லாரும் கவர்மெண்ட் ஸ்கூல்ல போய் தஞ்சமடைஞ்சாங்க.... நம்ம வாட்ச்மேன் சும்மா இல்லாம... குடும்பத்த ஸ்கூல்ல விட்டுட்டு மத்தவங்கள காப்பாத்த போய்ட்டாரு.... வாட்ச்மேன் பொண்டாட்டி.... பொலம்பி தீத்துட்டா.... பொண்ணு கண்ணாலத்துக்கு வெச்சிருந்த ஒரு பொட்டு நகையும், தண்ணில போய்டுச்சே... இந்த மனுஷன் கவலபடாம வெளியெ போய்ட்டாரேன்னு ஒரே பொலம்பல்.... 

இது இப்படி இருக்க பீச்சோரம் இருந்த பெரிய மனுஷங்க எல்லாம்... அரண்டு போய் கிடந்தங்க.... இப்படி ஒரு மழைய அவங்க வழ்நாள்ல பாத்திருப்பாங்களா!! எந்த எழை பாழைகள தொரத்திட்டு வீடு கட்டுனாங்களோ அந்த குப்பத்து ஜனங்க தான் உதவிக்கு ஓடி வந்தாங்க.... எல்லரையும் பாதுகாப்பா வெளியேத்திட்டு... தண்ணில நின்னாங்க....

லேசா மழை ஒய்ஞ்சது.... ஆனா வெள்ளம் வடியல.... எங்கெங்கெருந்தோ முகம் தெரியாத மனுஷங்க ஒடி வந்து ஒதவி செஞ்சாங்க... சாப்பாடு குடுத்தாங்க... வாட்ச்மேன் பெரிய பொண்ணும்... சின்ன பொண்ணும் ஸ்கூல் ஓரமா வந்த வாய்கா தண்ணில கிழிஞ்ச துண்டுல மீன் புடிச்சி வெளையடினு இருந்துச்சிங்க.... அப்போ ஒரு நீல கலர் வெல்வெட் டப்பா மாட்டுச்சி.... ரெண்டு பேரும் ஒடி போய் அவங்க அம்மாகிட்ட காமிச்சாங்க.... தெறந்து பாத்தா புத்தம் புது தாலி...... மொத்த குடும்பமும் ஒறஞ்சு போய் நின்னுட்டாங்க.... அடிச்ச காத்துல பறந்து வந்து கை மேல விழுந்திச்சி ஒரு மயில் கொண்டை பூ.... அழகா சிரிச்சிகிட்டே....


அது வேற யாரு பொருளும் இல்லிங்க.,.. நம்ம கண்ட்ராக்டர் நண்பர் பொண்ணுக்காக வாங்கி வெச்ச தாலிய அவரு மனைவி தவறுதலா டிரஸிங் டேபிள் மேலேயே வைக்க.... மழை வெள்ளத்துல அடிச்சிட்டு வந்துடிச்சி!!!

No comments:

Post a Comment