Thursday, December 30, 2010

மனசு

சின்ன பயலா இருக்கும் போது.... லீவ் விட்டா அத்தை வீட்டுக்கு போறது வழக்கம்.... எங்க அத்தை வீடு இருப்பது வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர்....  நாங்க இருப்பது தர்மபுரியில்..... அப்பவெல்லாம் பஸ் பயணம்ங்கிறது ரொம்ப ஜாலியான விஷயம்... ஜன்னலோரத்தில் ஒக்காந்துகிட்டு வேடிக்கை பாத்துகிட்டே வருவோம்.... நான் மிஸ் பண்ணாம பாக்குற விஷயங்கள் 3,  போற வழியில் தென்பெண்ணை ஆறு அப்புறம் அத சுத்தி இருக்கிற தென்னந் தோப்பு, மாந்தோப்பு மனசுக்கு இதமான காத்து, அப்புறம் பச்சை பசேல் என்று விரிகிற காட்சி மனசுக்கு ஒரு இதமா இருக்கும், அத தாண்டினா போச்சம்பள்ளி, சின்ன ஊர், பஸ் அஞ்சு பத்து நிமிஷம் நிக்கும், எல்லாரும் மறக்காம வாங்குற ஒரு விஷயம், லிபட்டு (நிபட்!!)  (சென்னையில் இதை தட்டை, ஓட்டடை, தட்டுவடை, தட்டடை அப்படின்னு பல மாதிரி சொல்லுவாங்க) ... இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா, வெங்காயம், அரிசி மாவு, கடலை மாவு சிறிதளவு வேற என்ன என்னவோ போட்டு கடலை எண்ணையில் பொரிச்சு எடுப்பாங்க.... அந்த சுவை மறக்க முடியாத ஒன்னு...

போச்சம்பள்ளி தாண்டியவுடன் வரும் இன்னொரு சிற்றூர் மத்தூர்..... மத்தூரில் பஸ் நின்னதும் உடனே கூடிவிடும் சின்ன வியாபாரிகள் கூட்டம்... பன வெல்லம், பனங் கிழங்கு, பதனீ அப்படீன்னு ஒரே பனை மரத்து ஐட்டமா இருக்கும்...  பஸ் கிளம்பினாலும் அந்த பனை பொருளுகளோட வாசனை சுத்திகிட்டே இருக்கும்.... ஹ்ஹ்ம்ம்.....

மழை நாட்களில் சிறிய தூரலில் பஸ்ஸில் செல்லும் அனுபவம் மனசை விட்டு இன்னும் அகலாமல் இருக்கு.... தென்பெண்ணை ஆத்து பாலத்த தாண்டி வண்டி போகும்போது, மாமர கிளைகள் கைகெட்டும் தூரத்தில் தொங்கும், சில சமயங்களில் காய்த்து தொங்குகிற மாங்காய்கள் ரோட்டில் விழுந்து கிடக்கும், பயணிகள் கைகளால் பறிச்சும் மாங்கா பறிப்பாங்க.... அந்த அளவு செழுமை..... ம்ம்ம்ம்....

சமீபத்தில் ஊருக்கு போயிட்டு, திருப்பத்தூர் வரை காரில் போனோம்..... நிறைய மாற்றங்கள்...  (நான் சென்னையில் செட்டில் ஆகி விட்டதால்... ஊருக்கு போறது ரொம்ப கொறஞ்சிடுச்சி).... தென்பெண்ணை ஆத்து பாலத்துகிட்ட காரை கொஞ்ச நேரம் நிப்பாட்டி... ஏக்கபெருமூச்சு விட்டேன்.... பழைய ஞாபகம் சுத்தி சுத்தி வந்துச்சி.... அப்படியே கொஞ்ச தூரம் நடந்தேன்..... ஒரு சின்ன மாந்தோப்பு கிட்ட காரை நிப்பாட்டி.... சின்னதா ஒரு மாங்கா பறிக்க..... ஒரு குதி குதிச்சேன்.....  அவ்வளவுதான்.... எங்கிருந்தோ ஒரு கல் டும்ன்னு கார் மேல விழுந்தது..... அதுக்கப்புறம்..... யாரோ அசிங்கமா திட்டிகிட்டே ஓடி வர்ற மாதிரி சத்தம் கேட்டுச்சி...... !!!

1 comment:

வாசகன் said...

போச்சம்பள்ளியில சோளகதிர விட்டுட்ட விமல்... அருமை நண்பா...

Post a Comment